Thiru N. M. R. Subbaraman. (14 August 1905 – 25 January 1983) was an Indian freedom fighter and politician
மகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்? தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியை அறியாதவர் யாரும் இல்லை. ஆனால், மதுரை காந்தி என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு சுதந்திர போராட்ட வீரர் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவார்கள். நிலாவில் முதலில் கால் வைத்தவர் பெயர் மட்டுமே இந்த உலகம் நினைவில் கொண்டுள்ளது என்ற கூற்றினை போல.. சுதந்திர போராட்டத்திலும் முன்னின்ற சில தலைவர் பெயர் மட்டுமே வரலாற்றில் பிரபலமாக அறியப்பட்டு வருகிறது. விடுதலைக்காக தங்கள் பொருள், நிலம், உயிர் என தியாகம் செய்த பலரது வரலாறு யாரும் அறியாத, காணாத சுவடுகளாய் மறைந்துக் கொண்டிருக்கின்றன. காந்தியின் வழியை பின்தொடர்து விடுதலைக்காக போராடிய விடுதலை போராட்ட வீரர் தான் என்.எம்.ஆர். சுப்பராமன் என்கிற மதுரை காந்தி. இவர் மதுரை நாட்டாண்மை மல்லி குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராயலு அய்யர் - காவேரி அம்மாள் ஆவர். இந்த தம்பதிக்கு சுப்பராமன் இரண்டாவது குழந்தை. பர்வதவர்தனி என்பவரை சுப்பராமன் திருமணம் செய்துக் கொண்டார். காந்தியின் வழியில் நின்று விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால் இவரை ...